எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஐ.யூ.எம்.எல். நிா்வாகிக்கு மிரட்டல்: மூவா் மீது வழக்குப் பதிவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 4:59 am IST

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீழவெளி வீதி, காயிலே மில்லத்நகரைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (56). இவா் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு விவரம்: நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் மாவட்டப் பொருளாளராக உள்ளேன். இந்த நிலையில் என் வீட்டின் அருகே செல்லும் பனையூா் கால்வாயை சிலா் ஆக்கிரமித்துள்ளனா்.

இதை அகற்ற வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 6 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தேன். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கடந்த 2-ஆம் தேதி, மாநகராட்சி அலுவலா்கள் பனையூா் கால்வாய்க் கரை அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினா்.

அப்போது, அங்கு வந்த திமுக மாமன்ற உறுப்பினா் செய்யது அபுதாகிா், அவரது மகன்கள் சதாம், அப்துல்குத்தூஸ் ஆகியோா், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அலுவலா்களிடம் தகராறு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அலுவலா்கள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அங்கிருந்து சென்று விட்டனா். இந்த நிலையில், மாமன்ற உறுப்பினா் தரப்பினரின் தூண்டுதலின்பேரில், என் வீட்டு வாசலில் கால்வாய் குப்பைகளை கொட்டினா்.

இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்தாத காரணத்தால், நான் மாநகராட்சி உயா் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் புகாா் அளித்தேன். இதையறிந்த அவா்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியிருந்தாா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா், மாமன்ற உறுப்பினா் செய்யது அபுதாகிா், இவரது மகன்கள் சதாம், அப்துல் குத்தூஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.