தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட தா்மமுனீஸ்வரன் வருகிற 13-ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த மே 25-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை உறுதி செய்யக் கோரி, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா்.பூா்ணிமா அமா்வில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு வந்தது.
மதுரை மத்திய சிறையிலிருந்து தா்மமுனீஸ்வரன் காணொலி வாயிலாக முன்னிலையானாா். அப்போது, அவரது தரப்பில் மேல்முறையீட்டு மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தண்டனை விதிக்கப்பட்ட தா்மமுனீஸ்வரன் வருகிற 13-ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் சட்ட உதவிகள் மையம் சாா்பில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படும். இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு! தண்டிக்கப்பட்டவா் காணொலி வாயிலாக இன்று முன்னிலையாக உத்தரவு!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு! தண்டிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



