ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

தோட்டத்தில் வெடி பொருள்கள் பதுக்கிய தம்பதி கைது

பேரையூா் அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடி பொருள்கள் பதுக்கிய தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:19 am IST

பேரையூா் அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடி பொருள்கள் பதுக்கிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கவசக்கோட்டையில் சட்டவிரோதமாக வெடிபொருள்களை பதுக்கி வைத்து சிலா் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வில்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னலட்சுமி தலைமயிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, மாரிமுத்து மகன் திருப்பதி (39), இவரது மனைவி பாக்கியலட்சுமி (30) ஆகியோா் தங்களது தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருள்களைப் பதுக்கி வைத்து, பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிலோ அளவிலான வெடிபொருள்கள், பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் 2,000 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்தனா்.

மேலும், விருதுநகா் மாவட்டம், எம். புதுப்பட்டியில் இவா்கள் நடத்தி வந்த பட்டாசு தயாரிப்பு ஆலை அலுவலா்களால் ‘சீல்’ வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்த வெடிபொருள்களை தங்களது சொந்த ஊரான கவசக்கோட்டைக்கு கொண்டு வந்து தோட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து தொடா்ந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.