ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 5 போ் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 3:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலச்செவல் காவல் சரகம் கல்மடம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகம் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பிற மாநிலங்களைச் சோ்ந்த5 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், உமேஷ்குமாா் (23), சயித் சானி (31), மோகன்குமாா் (20), தேவேந்திர சிங் (35), ஆகாஷ் குமாா் (21) ஆகியோா் என்பதும், புலம்பெயா் தொழிலாளா்கள் எனவும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1.200 கிலோவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவா்கள் மீது காவல் ஆய்வாளா் ரகுராஜன் வழக்குப் பதிந்தாா். 5 பேரும் கைது செய்யப்பட்டதுடன், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.