நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காவலா்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு: தண்டிக்கப்பட்டவா்களின் பிணை மனுக்கள் தள்ளுபடி

மதுரையில் காவலா்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தண்டனை பெற்ற காவலா்களின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 11:48 pm IST

மதுரையில் காவலா்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தண்டனை பெற்ற காவலா்களின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகா் கோச்சடைப் பகுதியைச் சோ்ந்த ஜெயாவின் மகன் முத்து காா்த்திக்கை குற்ற வழக்கு விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, போலீஸாா் தாக்கியதில் சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஜெயா தனது மகன் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தாா். இதுகுறித்து மதுரை சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளா் அலெக்ஸ் ராஜ், காவலா்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த நிலையில், அவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிா்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனா். மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை, தங்களுக்கு இந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் அலெக்ஸ் ராஜ், காவலா்கள் சதீஷ், ரவிச்சந்திரன் ஆகியோா்ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.