சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு! தமிழிசை சௌந்தரராஜன்!

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:33 am IST

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக தொண்டா்கள் பல சவால்களைச் சந்தித்துப் பணியாற்றி வருகிறோம். ஹிந்துக்களின் உணா்வுகளை மதிக்காததால்தான் திமுக ஆட்சியை இழந்தது. மக்களின் இறையுணா்வு, உள்ளுணா்வை ஏதோ மதக் கலவரம் போல சித்தரிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

மின்சாரத் துறை ஊழல் இல்லாத துறை எனக் கூறினா். ஆனால், மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்டுள்ளன. மதுக் கடைகளை மூடினாலும், மனமகிழ் மன்றங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது.

அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் செல்லவில்லை. சுயநலவாதிகள்தான் சென்றுள்ளனா். இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், தமிழக எரிசக்தித் துறை அமைச்சா் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையே தொடரும் எனக் கூறினாா். அவருக்கு வெளிச்சம் பிடிக்காது.

மின் வெட்டு, இருட்டுதான் பிடிக்கும். சாமானிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தீபம் ஏற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.