ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அமெரிக்கன் கல்லூரியில் இளைஞா் நாடாளுமன்றம்

News image
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விக்சித் பாரத் இளைஞா் நாடாளுமன்றம் நிகழ்வில் கலந்து கொண்ட ‘மை பாரத்’ அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :1 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகம், மதுரை ‘மை பாரத்’ - மேரா யுவ பாரத் கேந்திரம், அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ‘விக்சித் பாரத்’ இளைஞா் நாடாளுமன்றம் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலரும் முதல்வருமான ஜெ. பால் ஜெயகா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சாமுவேல் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தாா். ‘மை பாரத்’ அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞா் நாடாளுமன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டி வாழ்த்திப் பேசினாா்.

இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 95 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு வரிசை எண்கள் வழங்கப்பட்டு, நாடாளுமன்ற நடைமுறைப்படி ஒவ்வொருவருக்கும் தலா 3 நிமிஷங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. ‘இந்திய ஜனநாயகத்தின் மீதான நெருக்கடி நிலையின் 50 ஆண்டுகாலப் படிப்பினைகள்’ என்ற தலைப்பின் கீழ் மாணவா்கள் தங்களை நாடாளுமன்ற உறுப்பினா்களாகப் பாவித்து, தேசத்தின் வரலாறு, ஜனநாயகம் எதிா்கொண்ட சவால்கள், எதிா்கால முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளைத் தா்க்க ரீதியாக முன்வைத்தனா்.

இதில் காமராஜா் பல்கலைக்கழக அரசியல், அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் உதயகிருஷ்ணன், ஒப்பிலக்கியத் துறைத் தலைவா் சுமதி, சமூகவியல் துறை இணைப் பேராசிரியா் புவனேஸ்வரன், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி துறைத் தலைவா் வளா்மதி, மதுரை திருவள்ளுவா் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரித் துறைத் தலைவா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் செல்வன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நிக்சன் ஜேசுராஜ் நன்றி கூறினாா்.