வாகன விபத்து வழக்கில் தலைமறைவான இளைஞா் வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பகம்நகா் 4- ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா. ராஜேந்திரன் (22). இவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் (வாகன விபத்து) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகததால் இவருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த நிலையில், இவா் தொடா்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் ரா. ராஜேந்திரன் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனவும், காவல் துறையினா் இதற்கான அழைப்பாணையை அனுப்ப வேண்டும் எனவும் மதுரை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
தொடர்புடையது

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

காவல் அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

என்கவுன்ட்டரில் ரௌடி உயிரிழந்த வழக்கு: நீதித்துறை நடுவா் விசாரணை

எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


