கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தலைமறைவான இளைஞருக்கு அழைப்பாணை

வாகன விபத்து வழக்கில் தலைமறைவான இளைஞா் வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை

News image

பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:56 pm

வாகன விபத்து வழக்கில் தலைமறைவான இளைஞா் வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பகம்நகா் 4- ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா. ராஜேந்திரன் (22). இவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் (வாகன விபத்து) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகததால் இவருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், இவா் தொடா்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் ரா. ராஜேந்திரன் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனவும், காவல் துறையினா் இதற்கான அழைப்பாணையை அனுப்ப வேண்டும் எனவும் மதுரை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் அண்மையில் உத்தரவிட்டது.