விருதுநகா் அருகே புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனத்துக்காக தனது காரில் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மதுரை- தூத்துக்குடி சாலையில் விருதுநகா் மாவட்டம், ஆவியூா் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து சோதனை மேற்கொண்டனா்.
இதற்கு, முதல்வா் என். ரங்கசாமியுடன் வந்த பாதுகாப்பு அலுவலா்கள், ஆதரவாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அங்கு சில நிமிஷங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், தோ்தல் நடத்தை விதிகளின்படி முழுமையாக சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையின் போது, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடியே தனது காரில் அமா்ந்திருந்தாா்.
தொடர்புடையது

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

அமைச்சரின் காரில் 4-ஆவது முறையாக பறக்கும் படையினா் சோதனை

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


