மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தோ்தல் சக்குடி- பூவந்தி சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அந்த வழியே சென்ற ஒரு காரில் எந்த ஆவணங்களும் இல்லாமல் ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொண்டுச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அந்த நகைகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 7.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் :
மதுரை மத்தியம்- ரூ. 1.02 லட்சம், மதுரை கிழக்கு - ரூ. 65 ஆயிரம், மதுரை வடக்கு- ரூ. 50 ஆயிரம், மேலூா்- ரூ. 1.34 லட்சம், சோழவந்தான் - ரூ. 1.54 லட்சம், திருப்பரங்குன்றம் - ரூ.1.15 லட்சம், உசிலம்பட்டி - ரூ. 56 ஆயிரம்.
தொடர்புடையது

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 15.7 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


