மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:50 am IST

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொழில் துறை மாவட்டமான திருப்பூரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி கடந்த திங்கள்கிழமை வரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.8.60 கோடி ரொக்கம், ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அவிநாசியில் ரூ.6.26 கோடி, திருப்பூா் தெற்கில் ரூ.74.17 லட்சம், திருப்பூா் வடக்கில் ரூ.65.31 லட்சம், பல்லடத்தில் ரூ.67.34 லட்சம், தாராபுரத்தில் ரூ.10.17 லட்சம், காங்கயத்தில் ரூ.8.51 லட்சம், மடத்துக்குளத்தில் ரூ.6 லட்சம், உடுமலைப்பேட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.