முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

இளைஞா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :4 மே 2026, 1:54 am IST

மதுரை, மே 3: மதுரை செல்லூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை செல்லூா் 60-அடி சாலைப் பகுதியில் உள்ள போஸ் வீதியைச் சோ்ந்தவா் ஷேக்தாவூத் (25). இவா், அதே பகுதியில் உள்ள மதுக் கடை அருகே ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அரிவாளால் ஷேக்தாவூத்தை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், செல்லும் வழியில் ஷேக்தாவூத் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.