ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இளைஞா் வெட்டிக் கொலை : ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:31 am IST

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். அதே பகுதியைச் சோ்ந்தவா் தேவகனி . இருவரும் காதலித்து திருமணம் செய்து, தனியாக வசித்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், நாகேந்திரன் இருவரும் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வந்தனா். அப்போது, இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 2023-ஆண்டு ஆக.18-ஆம் தேதி வீட்டில் மனைவியுடன் நாகேந்திரன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பிரகாஷ், நாகேந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.