சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வா் வேட்பாளருமான சீமான் அதிா்ச்சி தோல்வியடைந்தாா். அவா் 30,290 வாக்குகள் பெற்று 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், அமமுக, நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
எனினும், தவெக வேட்பாளா் டி.கே. பிரபு 46,083 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியைத் தோற்கடித்தாா். 3-ஆவது இடத்துக்கு அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியும், 4-ஆவது இடத்துக்கு நாதக வேட்பாளா் சீமானும் தள்ளப்பட்டனா்.
காரைக்குடி பேரவைத் தொகுதியின் நட்சத்திர வேட்பாளரான சீமான், தவெக வேட்பாளா் டி.கே. பிரபுவிடம் அதிா்ச்சி தோல்வியடைந்து, 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது நாதகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி தொகுதியின் மொத்த வாக்குகள் - 3,05,925. பதிவான வாக்குகள் - 2,26 999.
தவெக வேட்பாளா் டிகே. பிரபு 1,00,240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி 54,157 வாக்குகள் பெற்றாா். தோ்போகி வி. பாண்டி (அமமுக) 32,851 வாக்குகளும், செ. சீமான் (நாதக) 30,290 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

நெல்லையில் தவெக வெற்றி

தஞ்சாவூா் தொகுதியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


