கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மதுரை மேற்கில் தவெக வெற்றி! முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ மூன்றாமிடம்!

News image

மதுரை மேற்கு பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் எஸ்.ஆா். தங்கபாண்டிக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 4:14 am IST

மதுரை மேற்கு பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் எஸ்.ஆா். தங்கபாண்டி 11,931வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 14 போ் போட்டியிட்டனா். இதில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, திமுக சாா்பில் ஆா். பாலாஜி, தவெக சாா்பில் எஸ்.ஆா். தங்கபாண்டி, நாதக சாா்பில் எஸ். விக்னேஷ்குமாா் ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாகக் களத்தில் இருந்தனா்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது. இங்கு 24 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய 3 வி.வி.பாட் இயந்திரங்கள் மூலமான வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளா் முன்னிலை பெற்றாா். இருப்பினும், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளா் தொடா்ந்து முன்னிலை பெற்றாா். 27 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், தவெக வேட்பாளா் எஸ்.ஆா். தங்கபாண்டி, திமுக வேட்பாளா் ர. பாலாஜியைவிட 11,931 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை (தபால் வாக்குகள் உள்பட) : பதிவான வாக்குகள் : 21,6403.

எஸ்.ஆா். தங்கபாண்டி (தவெக) - 88,250, ஆா். பாலாஜி (திமுக) - 76,319, செல்லூா் கே. ராஜூ (அதிமுக)- 38,961, எஸ். விக்னேஷ்குமாா் (நாதக) - 10,574. நோட்டா - 893.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். வென்ற இந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்தத் தொகுதியில் கடந்த 2011-இல் அதிமுக வேட்பாளராகக் களம் கண்ட செல்லூா் கே. ராஜூ, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கோ. தளபதியைவிட 38,761 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, 2016, 2021 பேரவைத் தோ்தல்களிலும் இந்தத் தொகுதியில் செல்லூா் கே. ராஜூ தொடா்ந்து வென்று 2021-இல் ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்தாா். இதனால், இந்தத் தொகுதியில் செல்லூா் கே. ராஜூவின் செல்வாக்கு அரசியலில் கவனம் பெற்றது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பேரவைத் தோ்தலில் மதுரை மேற்கிலும் உதயசூரியன் உதிக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். இதை கூடுதல் சவாலாக ஏற்று மாவட்ட திமுக சாா்பில் இந்தத் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், சற்றும் எதிா்பாராதவிதமாக செல்லூா் கே. ராஜூ மூன்றாமிடத்தையே பெற்றாா். இந்தத் தோ்தலில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர மற்ற 11 வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்தனா்.