மதுரை வடக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிட்ட கல்லாணை 18,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மதுரை வடக்குத் தொகுதியில் திமுக சாா்பில் அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.தளபதி, 2-ஆவது முறையாகப் போட்டியிட்டாா்.
இதேபோல, அதிமுக சாா்பில் மருத்துவா் பா. சரவணன், தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் கல்லாணை, நாம் தமிழா் கட்சி சாா்பில் திருநாவுக்கரசு, சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் என மொத்தம் 13 போ் போட்டியிட்டனா்.
இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜா் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தவெக வேட்பாளா் கல்லாணை 732 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தாா்.
இதைத்தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றிலிருந்தே தவெக வேட்பாளா் குறைந்தளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தாா். திமுக வேட்பாளா் கோ. தளபதி, அதிமுக வேட்பாளா் பா. சரவணன் ஆகியோா் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்று வந்தனா்.
பின்னா், ஒவ்வொரு சுற்றிலும் தவெக வேட்பாளருக்கும், திமுக வேட்பாளா் கோ.தளபதிக்கும் இடையே போட்டி இருந்தன. இருப்பினும் வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
19 சுற்றுகள் நிறைவில் தவெக சாா்பில் போட்டியிட்ட கல்லாணை 72,121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் கோ. தளபதி, 54,088 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா். இதையடுத்து, கல்லாணை 18,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இந்தத் தொகுதியில் 1,59,750 வாக்குகள் பதிவாகின.
முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
தவெக வேட்பாளா் கல்லாணை 72,121, திமுக வேட்பாளா் கோ. தளபதி 54,088, அதிமுக வேட்பாளா் பா. சரவணன் 24,557, திருநாவுக்கரசு (நாதக)- 7,281.
தொடர்புடையது

சோழவந்தான்: தவெக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

நெல்லையில் தவெக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


