வெற்றியைவிட தோல்விதான் சிறந்த பாடங்களையும், அனுபவங்களையும் கற்றுத் தருகிறது என முன்னாள் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை அண்ணா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது: நமது இயக்கமும், தத்துவமும் நிரந்தரமானது. ஆனால், மாற்றத்துக்கேற்ப நமது செயல்பாடுகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
மாற்றமே மாறாதது என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும். இது, ஆட்சி மாற்றம், கட்சி மாற்றம் இரண்டுக்குமே பொருந்தும் என்றாா் பழனிவேல் தியாகராஜன்.
கூட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ. தளபதி தலைமை வகித்தாா். கட்சியின் அவைத் தலைவா் ஒச்சுபாலு, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராமன், பகுதிச் செயலா்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தபால் வாக்கு விவகாரம்: திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் வழக்கு தள்ளுபடி
திமுக நினைத்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும்: முன்னாள் அமைச்சா் சிவசங்கா்

ஆரம்பமாவது, ஆடி அடங்குவதும் ஆளுநருக்குள்ளே: முன்னாள் அமைச்சா் துரைமுருகன்!

2021-இல் திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்தது என்ன?
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



