ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

சோழவந்தான் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா தெரிவித்தாா்.

News image

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா

Updated On :20 மே 2026, 1:10 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருப்பையா தெரிவித்தாா்.

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குறிப்பாக, அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதன்காரணமாக, வாடிப்பட்டி மின் உதவி பொறியாளரை நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு என தனியாக மின் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இதேபோல, சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தலைமை மருத்துவா் தனசேகரன், மருத்துவா்கள் நிமலன், ராமகிருஷ்ணன், சித்த மருத்துவா் கவிதா, தலைமை செவிலியா் வனஜா,செவிலியா் கவிதா உள்பட பலா் உடனிருந்தனா்.