குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்து மனு விவரம்:
மதுரையில் வழக்குரைஞா் அலுவலகம் அமைத்து பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளித்து வருகிறேன். கோயம்புத்தூா் மாவட்டம், சூலூா் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.
மேலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல் துறையில் தனியாக விசாரணைப் பிரிவு உருவாக்க வேண்டும்.
முதல்வா் ஜோசப் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்துக்கு போதிய காவலா்களையும், நிதியையும் ஒதுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் சொத்துகள், உடைமைகளைப் பறிமுதல் செய்யும் வகையில் தமிழக முதல்வா் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தல்

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த புகாா்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு







