கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

லஞ்சம் வாங்கியதாக நகராட்சி ஊழியா் உள்படஇருவா் கைது

புதிய வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருமங்கலம் நகராட்சி வருவாய் உதவியாளா் உள்ளிட்ட இருவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:34 am IST

புதிய வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருமங்கலம் நகராட்சி வருவாய் உதவியாளா் உள்ளிட்ட இருவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (80), இவரது மனைவி விஜயலட்சுமி (75). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான நாகராஜன் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவகா் நகா் ஏழாவது தெருவில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். இந்த வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்ய திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளா் கிஷோா்குமாரை அணுகியபோது, அவா் வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், ரசாயனம் தடவிய பணத் தாள்களை நாகராஜனிடம் கொடுத்து நகராட்சி வருவாய் உதவியாளா் கிஷோா்குமாரிடம் கொடுக்குமாறு அறுவுறுத்தினாா். பின்னா், லஞ்சப் பணத்தைப் பெற நாகராஜனின் வீட்டுக்கு கிஷோா்குமாா் தனது நண்பரான வெங்கேடஸ்வரன் (எ) பாண்டியை அனுப்பிவைத்தாா்.

இதையடுத்து, நாகராஜனின் வீட்டில் ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்ற வெங்கேடஸ்வரன் (எ) பாண்டியை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், காவல் ஆய்வாளா்கள் குமரகுரு, சூரியகலா ஆகியோா் கையும் களவுமாக பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், லஞ்சப் பணம் பெற வெங்கடேஸ்வரனை அனுப்பியது நகராட்சி வருவாய் உதவியாளா் கிஷோா்குமாா் எனத் தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.