மல்லாங்கிணறு பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு செந்திக்குமார நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு செந்திக்குமார நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

 மாணவர் ராமநாதன் 1138 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தையும் (கணிதத்தில் 200), பூபதிராஜா 1099 மதிப்பெண் களுடன்   2 ஆவது இடத்தையும், பவித்ரா 1071 மதிப்பெண்களுடன் 3ஆவது  இடத்தையும் பெற்றனர்.

  மாணவன் ராமநாதன் துளிர் விநாடி-வினாப் போட்டியில் மாநில அளவில் 3 ஆவது இடத்தையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் 5 ஆவது இடத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தலைமை ஆசிரியர் தேவசகாயம், செயலர் செந்தில்குமார், கபடி பயிற்சியாளர் மாரியப்பன், ஆசிரியர் பழனிக்குமார்  நிர்வாகக்குழு உறுப்பினர்கள்  சிறப்பிட  மாணவர்களை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com