தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம்

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

Updated On :

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

   திண்டுக்கல் மலையடிவாரம் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் மூலவருக்கு திருமஞ்சனம் செய்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலையில், மூலவர் ராஜ அலங்காரத்துடனும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  ரெட்டியார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயிலில் மூலவர் கோபிநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், பன்னீர் உற்சவருக்கு நாள் முழுவதும் அபிஷேகம் செய்யப்பட்டது.  ரெட்டியார்சத்திரம் அருள்மிகு கதிர் நரசிங்கப் பொருமாள் கோயிலில் மூலவருக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சின்னாளபட்டி அருள்மிகு அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு தியான மாருதி ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிம்மாசனத்தில் தியான நிலையில் அமர்ந்திருந்த சுவாமிக்கு, பல்வேறு ஆபரணங்கள் பூட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

  தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஸ்ரீராமகிரி அருள்மிகு கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கோயில், வடமதுரை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிலும் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி சிறப்பு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.