நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு: நலப்பணிகள் இணை இயக்குநர் எச்சரிக்கை
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நலப்பணிகள் இணை இயக்குநர் எம். ரவிக்கலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நலப்பணிகள் இணை இயக்குநர் எம். ரவிக்கலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருக்கு இலவசமாக 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட 13 மருத்துவமனைகளிலும் தரமான உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் சமையலர்கள், அதனை கண்காணிக்க செவிலியர், அவற்றுக்கு பொறுப்பாக மருத்துவ அலுவலர் கொண்ட குழு, ஒவ்வொரு மருத்துமனையிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் காய்கறிகளை சமையலர்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகப் புகார் எழுந்தது. மேலும், நிலக்கோட்டை மருத்துவமனையில், குறைவான நோயாளிகளுக்கு உணவு வழங்கிவிட்டு, பதிவேட்டில் அதிகமானோருக்கு வழங்கியதாக எழுதி மோசடி செய்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அலுவலருக்கு மெமோ வழங்கப்பட்டது. இது, பிற மருத்துவமனை ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணை இயக்குநர் எச்சரிக்கை: அரசின் வழிகாட்டுதலின்படி, நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதை அந்தந்த மருத்துவமனை அலுவலர்கள், கண்காணிப்பு செவிலியர்கள் மற்றும் சமையலர்கள் உறுதி செய்யவேண்டும். காய்கறி உள்ளிட்ட சமையல் பொருள்களை திருடுவது, உணவு வழங்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து எழுதுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நலப்பணிகள் இணை இயக்குநர் எம். ரவிக்கலா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், பணியில் உள்ள செவிலியர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்திருக்க வேண்டும். மாற்று உடையில் பணிபுரிவோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
ரூ.17 லட்சத்தில் மின் சலவை இயந்திரம்: திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருவதால், மருத்துவமனையில் உள்ள துணிகளை சலவை செய்வதற்கு ரூ.17 லட்சம் செலவில் மின் சலவை இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின் சலவை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், திண்டுக்கல் மருத்துவமனை மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் உள்ள துணிகளும் இயந்திரம் மூலம் சலவை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

