திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 22,159 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர் 22,159 பேரும், தனித் தேர்வர்கள் 479 பேரும் என மொத்தம் 23,193 பேர் தேர்வு எழுதுவதற்கு 66 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 36 மையங்களில் 7020 மாணவர்கள், 7915 மாணவிகள் என மொத்தம் 14,935 பேரும், பழனி கல்வி மாவட்டத்தில் 30 மையங்களில் 4025 மாணவர்கள், 4233 மாணவியர் என மொத்தம் 8258 பேரும் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு மையங்களை கண்காணிக்க, 66 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 66 துறை அலுவலர்கள், 8 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 1,250 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1,522 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், 166 பறக்கும் படை அலுவலர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொழிப் பாடத்துக்கான தமிழ் முதல் தாள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 22,159 மாணவர்களில் 213 பேர் பங்கேற்கவில்லை. அதேநேரம், ஹிந்தி 33, பிரெஞ்ச் 121, சமஸ்கிருதம் 5 ஆகிய தேர்வர்கள் முழுமையாகப் பங்கேற்றனர். தனித் தேர்வர்களில் 37 பேர் முதல் நாள் தேர்வினை எழுதவில்லை.
தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி, மாவட்டக் கல்வி அலுவர்கள் ஜாகீர் உசேன்(திண்டுக்கல்), மாலா மணிமேகலை (பழனி) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







