ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

போக்குவரத்து அதிகாரியாக நடித்து பணம் பறித்த இருவர் கைது

பழனியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பழனியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் வியாழக்கிழமை காலை இருவர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டிருந்தனர்.

 அப்போது அவர்கள் தங்களை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டனராம். மேலும் வாகனங்களுக்கு அபராதமும் விதித்து பணமும் வசூலித்தனராம். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து பொள்ளாச்சிக்கு கரிலோடு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது போல் நடித்து அவர்கள் அபராதமும் விதித்தனராம். இந்நிலையில் அந்த லாரியின் ஓட்டுநர் கரிவேலனுக்கு அவர்கள் மீது சந்தேகம் வரவே அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் போலி என்பது தெரியவந்தது.  மேலும் விசாரணையில் ஒருவர் பழனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆனந்தகுமார் (40) என்பது, மற்றொருவர் நேதாஜி நகர் சுப்புசாமி மகன் சசிக்குமார் (54) என்பதும் தெரியவந்தது. இதில் ஆனந்தகுமார் திண்டுக்கல்லில் அரசு துறையில் தாற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இருவரையும் அடிவாரம் போலீஸார் கைது செய்து காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.