குடிநீர் வழங்கக் கோரியும், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரியும் திண்டுக்கல் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட அபிராமிநகர், டான்பொஸ்கோ நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாலேயே, பொதுமக்களுக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் தனியார் குடிநீர் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலைப்பட்டி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

