/

கொடைக்கானலில் கந்து வட்டியால் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் புகார்

கொடைக்கானலில் கந்து வட்டிக்கு பாதிப்புக்குள்ளாவதாக வணிகள்கள் உள்ளிட்டோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:06 am

DIN

கொடைக்கானலில் கந்து வட்டிக்கு பாதிப்புக்குள்ளாவதாக வணிகள்கள் உள்ளிட்டோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வருபவர்கள், சாலையோர
வியாபாரிகள், உணவகங்கள், தேனீர் கடைகள், அழகு நிலையம் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தொடர்ந்து வருகிறது.
 இதனால் பணம் வாங்கியவர்கள் பல ஆண்டுகளாக வட்டியை மட்டும் கட்டி வருவதால் வாங்கிய பணத்திற்கு மேலும் பணம் கட்டியுள்ளனர்.
இருப்பினும் கூடுதல் வட்டி செலுத்தி வருவதால் வணிகர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஷீலா, வேணி ஆகியோர் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு வருவதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.