கொடைக்கானல் அருகே கந்து வட்டிக் கேட்டு மிரட்டியவர் கைது
கொடைக்கானல் அருகே கந்து வட்டிக் கேட்டு மிரட்டியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


கொடைக்கானல் அருகே கந்து வட்டிக் கேட்டு மிரட்டியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பண்ணைக்காடு ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பரையூர் பகுதியைச் சேர்ந்த பவுன்தேவர் மகன் ராஜா (50) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
மீண்டும் 6 மாதம் கழித்து ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். மொத்தம் ரூ.4 லட்சம் கடனுக்காக 10 நாள்களுக்கு ஒரு முறை வட்டி செலுத்தி வந்த செந்தில்குமார் ரூ. 17 லட்சம் வரை பணம் கொடுத்து விட்டாராம்.
இந்நிலையில் மீண்டும் ரூ.80 லட்சம் தர வேண்டும் என ராஜா தனது வழக்குரைஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார், தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுபக்குமார் வழக்குப் பதிந்து கந்து வட்டிக் கேட்டு மிரட்டிய ராஜாவைக் கைது செய்தார்.
கந்துவட்டிக் கேட்டு மிரட்டியவர் மீது வழக்குப் பதிவு: கொடைக்கனல் பள்ளங்கி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் வடிவேல். இவர் கொடைக்கானல் மாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மொக்கையாத் தேவர் மகன் சின்னமணித் தேவரிடம் விவசாயத்திற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 5 சதவீத வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
விவசாயம் செய்து அதிலிருந்து வரும் பணத்தை வட்டியுடன் சேர்த்து அவ்வப்போது அவர் கொடுத்து வந்தாராம். இதுவரை மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சின்னமணித் தேவர் மீண்டும் ரூ.2 லட்சம் கேட்டதுடன், கொடுக்க இயலவில்லை எனில் தோட்டத்தை எழுதி தரும்படி வடிவேலை மிரட்டினாராம். இதுகுறித்து வடிவேல் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாகியுள்ள சின்னமணித்தேவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...