கொடைக்கானலில் பூட்டிய வீட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சடலம்

கொடைக்கானலில் புதன்கிழமை பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் சடலத்தை  போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

கொடைக்கானலில் புதன்கிழமை பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் சடலத்தை  போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அருகிலுள்ளவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற  போலீஸார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு ஆண் சடலமாக கிடந்தார்.
  விசாரணையில், அவரது பெயர் தில்லைநாதன் (59) என்பதும்,  இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும்,  கடந்த பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் இவரது உறவினர்கள் வெளியூரில் வசித்து வருவதாகவும்,  இவர் இறந்து 4 நாள்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com