ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 66-ஆவது பிறந்தநாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள பேரறிஞர் அண்ணா திடலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலர் அர.சக்கரபாணி எம்எல்ஏ. தலைமை வகித்தார். நகர திமுக செயலர் ப.வெள்ளைச்சாமி வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் சி.ராஜாமணி, ஒன்றிய செயலர்கள் இரா.சோதீசுவரன்,தி.தர்மராஜன், க.தங்கராஜ், நா.சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம், அன்பு என்ற காதர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவர் ஜ.லியோனி, நத்தம் எம்எல்ஏ எம்.ஏ.ஆண்டிஅம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






