கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கொடைக்கானலில் மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் போராட்டம்: 75 பேர் கைது

கொடைக்கானலில் பெண்கள் அமைப்பு சார்பில் மதுக்கடையை அகற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:57 am IST

கொடைக்கானலில் பெண்கள் அமைப்பு சார்பில் மதுக்கடையை அகற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் ஆரம்பப் பள்ளி, வழிபாட்டுத்தலம் போன்றவை உள்ளன. 
இந்நிலையில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பெண்கள் அமைப்பின் சார்பில் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் போராட்டம் நடைபெற்றது. 
அப்போது மதுக்கடையை திறக்க விடாமல் பெண்கள் அமைப்பினர் அப்பகுதிக்குச் சென்றனர். 
அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து போலீஸார், பெண்கள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்பட வில்லை.
 இதனால் ஜெஸிந்தா, மகேந்திரபாபு உள்ளிட்ட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 75 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு  கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.