புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சென்றாயப் பெருமாளை மலைக்கு வழியனுப்பும் திருவிழா

வத்தலகுண்டு அருகே மலையிலிருந்து இறங்கிய சென்றாயப் பெருமாளை, மீண்டும் மலைக்கு வழியனுப்பி வைக்கும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:27 am

வத்தலகுண்டு அருகே மலையிலிருந்து இறங்கிய சென்றாயப் பெருமாளை, மீண்டும் மலைக்கு வழியனுப்பி வைக்கும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வத்தலகுண்டு அடுத்துள்ள பழைய வத்தலகுண்டு மலைப் பகுதியில் சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலையை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  கோட்டைப்பட்டி கிராமத்துக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். 
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மலைக் கோயிலிலிருந்து புறப்பட்ட சென்றாயப் பெருமாள், கோட்டைப்பட்டியில் உள்ள ராமசாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தார். பின்னர், அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கோட்டைப்பட்டி கிராமத்தில் நகர் வலம் வந்த சென்றாயப் பெருமாளை, சேவையாட்டம், தேவராட்டம், கும்மிப்பாடல்கள் பாடி, அப்பகுதியைச் சேர்ந்த ராஜ கம்பளத்து சமுதாய மக்கள் வழிபட்டனர். இதில் வத்தலகுண்டு மட்டுமின்றி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 இந்நிலையில் மலைக் கோயிலுக்கு சுவாமியை வழியனுப்பும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ராஜ கம்பளத்து சமுதாயப் பெண்கள் மஞ்சள் நீராட்டு நடத்தி பெருமாளை வழிபட்டனர். மலைக்கு செல்ல விரும்பாத பெருமாள் கீழேயே தங்க நினைப்பதும், அவருக்கு விருப்பமான பாடல்கள் பாடி, நடனமாடி வழியனுப்புவதும் இத்திருவிழாவின் இறுதி கட்ட நிகழ்வாகும். 
அதன்படி, குறிப்பிட்ட சில திரைப்படப் பாடல்களை பெருமாள் விரும்பி கேட்பதாக கூறிய விழா ஏற்பாட்டாளர்கள், அந்த பாடலுடன், நடனமாடி மூலவர் பெருமாளின் பூ அலங்காரத்தை கலைத்து, மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்ணன் சின்னம்மநாயக்கர் தலைமையிலான விழாக் குழுவினர் மற்றும் கோட்டைப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.