கொடைக்கானலில் வியாழக்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(55). கூலித் தொழிலாளி. இவர் அப்சர்வேட்டரியிலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி கொடைக்கானலுக்கு வந்துள்ளார். செவண்ரோடு அருகே வந்த போது பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்த ஜெயராஜ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநர் அலெக்சாண்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









