பழனியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவது போல், கோயில் ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
பழனி ஜவஹர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (57). பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புதுதாராபுரம் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டிஎம். மையத்தில், தனது சம்பளப் பணத்தை எடுக்க புதன்கிழமை சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு நபர், தான் பணம் எடுத்துத் தருவதாக செல்வராஜிடம் கூறினாராம். இதையடுத்து, செல்வராஜின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி, ஏடிஎம் அட்டையை திரும்ப வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாஸ்புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று கேட்டுள்ளார்.அப்போது, செல்வராஜின் கணக்கில் ரூ. 22 ஆயிரம் எடுக்கப்பட்டதாகவும், தற்போது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும் வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பணம் எடுத்துத் தருவதாக கூறிய நபர், செல்வராஜின் ஏடிஎம் அட்டையை வைத்துக் கொண்டு, போலி ஏடிஎம் அட்டையை திரும்ப தந்துள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் மையங்களில் வயதானவர்களையும், கிராம மக்களையும் குறிவைத்து இதுபோன்று மோசடி பேர்வழிகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


