பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் இருக்காது: ஆட்சியர்

குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:05 am IST

குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
    திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலகத் தாய்ப்பால் வார விழாவில் அவர் பேசியது: பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கும் தாய்ப்பால் அவசியம். குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகள் மற்றும் குறை மாதக் குழந்தைகளை காக்கும் மருந்து தாய்பால் மட்டுமே. தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் வழங்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு மட்டுமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் தாயாக திகழ்கிறார்கள். 
  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கிக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பாலை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான உறைநிலை குளிர்பதன கருவி, கிருமி நீக்கும் கருவி, தாய்ப்பால் எடுக்கும் கருவி, குளிர் சாதனப்பெட்டி போன்ற அனைத்து நவீன கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தாய் பால் வங்கியில் 3 மாதங்கள் வரை தாய்பாலை சேமித்து வைக்க முடியும். குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்பால் மட்டுமே கொடுத்தால் சிசு மரணம் என்பது இருக்காது என்றார்.  
  நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி முன்னிலை வகித்தார். விழாவில்  தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர், சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.