அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

திண்டுக்கல்லில் ஆளுநர் திறந்து வைத்த பூங்கா 3 நாள்களில் மூடல்: ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

தமிழக ஆளுநர் திறந்து வைத்த பூங்கா மூன்றே நாள்களில் மூடப்பட்டுவிட்டதால், அங்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். 

Published On :

தமிழக ஆளுநர் திறந்து வைத்த பூங்கா மூன்றே நாள்களில் மூடப்பட்டுவிட்டதால், அங்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். 
      திண்டுக்கல் ஆர்எம்.காலனி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் (2016-17), ரூ.1.20 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பல மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் திண்டுக்கல் நகருக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
    திறப்பு விழாவைத் தொடர்ந்து 3 நாள்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டில் பூங்கா இருந்தது. அதன்பின்னர், பூங்காவில் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, மாநகராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது.
     இதனிடையே, ஆளுநரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள், கொண்டு வரப்பட்ட இடத்துக்கே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதையறிந்த அப்பகுதியினர், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
     இது தொடர்பாக பொதுமக்கள் கூறியது: ஆளுநர் வருகையையொட்டி,  மாநகராட்சி ஆணையர் தலைமையில் 2 நாள்களாக இந்த பூங்காவில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. மர இருக்ககைகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், செயற்கை நீருற்று, பூச்செடிகள் என பூங்கா முழுவதும் வண்ணமயமாகக் காட்சி அளித்தது.
     ஆளுநர் சென்ற 3 நாள்களில், இவை அனைத்தும் அகற்றப்பட்டதுடன், பொதுமக்களும் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.     இதையறியாத பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும், ஆளுநர் திறந்து வைத்த பூங்கா என்ற எதிர்பார்ப்பில் மாலை நேரங்களில் ஆர்எம்.காலனி அம்ரூத் பூங்காவுக்கு வருகின்றனர். பூங்கா மூடப்பட்டிருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் எனத் தெரிவித்தனர்.
     இது குறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியது:  பூங்காவுக்குள் அமைந்துள்ள கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. ஆளுநரின் திடீர் வருகையையொட்டி, கிணற்றைச் சுற்றிலும் தற்காலிக மறைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல், இருக்கை வசதியும் கூடுதலாக ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனாலேயே, பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.
     இந்தப் பணிகளை விரைவாக முடித்து, பூங்கா பராமரிப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.