தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஆர்.கோம்பை பள்ளி தலைமையாசிரியரை மாற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

எரியோடு அடுத்துள்ள ஆர்.கோம்பை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியைரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:06 am IST

எரியோடு அடுத்துள்ள ஆர்.கோம்பை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியைரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர் அடுத்துள்ள ஆர்.கோம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக மோகன்தாஸ் என்பவருக்கும், குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலர் அருண்குமார் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. 
 இதனிடையே, தலைமையாசிரியர் மோகன்தாசை பணியிட மாற்றம் செய்யக் கோரி, பள்ளியை திறக்கவிடாமல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு போட்டியாக, மோகன்தாசை மாற்றக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு தரப்பினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்குதியைச் சேர்ந்த அமமுக பிரமுகர் தர்மர் கூறியது: 
 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், உள்ளூர் (ஆர்.கோம்பை) மக்கள் யாரும் தலைமையாசிரியருக்கு ஆதரவாக மனு அளிக்கவில்லை. வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து மனு அளித்துள்ளனர். சரியான நேரத்தில் பள்ளிக்கு வராமலும், கற்பித்தல் பணியை விட சங்க பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வரும் தலைமையாசிரியர் மோகன்தாசை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.