ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பழனியில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்புவில்லை ஒட்டும் நிகழ்ச்சி

பழனியில் சுழற் சங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் சார்பில், வாகனங்களின் முகப்பு விளக்கில் அதிக ஒளியை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன.

Updated On :

பழனியில் சுழற் சங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் சார்பில், வாகனங்களின் முகப்பு விளக்கில் அதிக ஒளியை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன.
      கன ரக, இலகு ரக மற்றும் இரு சக்கர வாகன முகப்பு விளக்குகளின் அதிக ஒளியை தடுக்கும் வகையில், கருப்பு வில்லை ஒட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,  பழனி சுழற் சங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் சார்பில் வாகன முகப்பு விளக்கில்  கருப்பு வில்லைகள் ஒட்டும் நிகழ்ச்சி, பேருந்து நிலையம் முன்பாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் தலைமையேற்று தொடக்கி வைத்தார். பழனி சுழற் சங்கத் தலைவர் விஷ்ணுவர்த்தன், செயலர் பிரேம்நாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
     இதில், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என சுமார் ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. மேலும், போக்குவரத்து விதிகள் குறித்தும், அவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் துண்டுப்பிரசுரம்  வழங்கப்பட்டது. விதியை மீறி அதிக ஒளி உமிழும் விளக்குகள், கூடுதல் விளக்குகள் பொருத்திய வாகனங்களின் உரிமையாளர்களிடம் அவற்றை அகற்ற வலியுறுத்தப்பட்டது.         நிகழ்ச்சியில், சுழற் சங்க முன்னாள் தலைவர் சண்முகநாதன், ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.