மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ரூ.70 லட்சம் மோசடி: பொறியாளர் கைது

ஆன்லைனில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி  மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த பொறியாளரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :

ஆன்லைனில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி  மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த பொறியாளரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. ஆன் லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த குணசேகரன், பூந்தமல்லியைச் சேர்ந்த பொறியாளர் செல்வம் (42) ஆகியோர்,  குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக சுப்பிரமணியை அணுகியுள்ளனர். 
 இதனை அடுத்து ரூ.70 லட்சத்தை, குணேசேகரன் மற்றும் செல்வம் ஆகியோரிடம் சுப்பிரமணி கொடுத்துள்ளார். ஆனால், தங்கம் வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப ஒப்படைக்காமலும், சுப்பிரமணியை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.  
 அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ரூ.70 லட்சம் மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பொறியாளர் செல்வத்தை, போலீசார் கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.