திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 921ஆக சரிவடைந்துள்ள நிலையில், ஸ்கேன் மையங்களின் மீதான கண்காணிப்பை சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. இதில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகளே பிறப்பு விகிதமாக இருந்தது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை 21.59 லட்சமாக இருந்தது. 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பிறப்பு விகிதம் 934 ஆக இருந்தது.
இதனிடையே சுமார் 7 ஆண்டுகள் இடைவெளியில் தமிழகத்தின் குழந்தைகள் பிறப்பு விகிதம் 921 ஆக சரிவடைந்துள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 916 ஆக சரிவடைந்துள்ளது.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், பழனி மற்றும் திண்டுக்கல் என 2 சுகாதார மாவட்டங்கள் அமைந்துள்ளன. இதில், திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் பிறப்பு விகிதம் 925ஆக இருந்து வரும் நிலையில், பழனி சுகாதார மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 907ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
மலைக் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகள் அதிகம் நிறைந்துள்ள பழனி சுகாதார மாவட்டத்தில், பிறப்பு விகிதம் குறைந்து வருவது, சுகாதாரத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 930 ஆக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 2011-ல் 934 ஆக முன்னேற்றமடைந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் 921 ஆக சரிவடைந்திருப்பது, ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை பதிவுப்பெற்ற ஸ்கேன் மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 43 இடங்களிலும், தனியார் மருத்துவமனைகளில் 94 இடங்களிலும் உள்ளன. ஆனாலும், கருவில் உள்ள பாலினத்தை அறிந்து, சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்வதே பாலின விகிதம் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
திண்டுக்கல் மாவட்டத்தின் பாலின விகிதம் மாநில சராசரியை விட, வீழ்ச்சியடைந்துள்ளது. மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது.
ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்கள், 2 மையங்களுக்கு கூடுதலாக பணியாற்றக் கூடாது. மாவட்டத்தில் 50 கி.மீ., கூடுதலான தூரத்தில் உள்ள இடங்களுக்கு பரிசோதனைக்கு செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்கேன் மையங்கள், மருத்துவமனைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கணவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு
திருப்புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை

பேரூா் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் மாட்டு வண்டி பந்தயம்

தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


