
கொலை வழக்கு: அண்ணன் தம்பி உள்பட4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திண்டுக்கல் இளைஞரை கொலை செய்த வழக்கில் கைதான அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் இளைஞரை கொலை செய்த வழக்கில் கைதான அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் ஆர்வி நகரைச் சேர்ந்த குமரேசன் கடந்த ஜூன் 18ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, திண்டுக்கல் நாரணயம்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த சௌ.ஆசிக் முகமது என்ற அல் ஆசிக்(24), க.முகமது ஷேக் அப்துல்லா(22), குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த பா.அசோக்குமார்(24), இவரது தம்பி பா.சந்திரசேகர்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலையில் இருந்துவரும் நிலையில், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






