டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மார்க்சிஸ்ட் கட்சியினர் மனிதச்சங்கிலிப் போராட்டம்

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பழனியில் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் நகர செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி, சிஐடியூ மனோகரன், ஒன்றிய நிர்வாகிகள் அருள்செல்வன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.