பழனியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலங்களை அகலப்படுத்தும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனால் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. புதுதாராபுரம் சாலையில் சிறு வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதேநேரத்தில் பெரிய வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் அனுமதியின்றி சாலையோரம் கொட்டியிருந்த கட்டடப் பொருள்கள், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள் அகற்றப்பட்டன. இதேபோன்று திண்டுக்கல் சாலை, பாளையம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 18 போ் கைது

பாரதிதாசன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு அரசு சாா்பில் காலை உணவு வழங்க ஏற்பாடு! புதுச்சேரி கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம்

சேலம் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே ஓணம் சிறப்பு ரயில்



