கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் தீ
கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் கடும் பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால் ஏ.ஐ.சி.டி.யூ. நகரில் குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள புல்வெளிகள், மரத்தின் இலைகள், சருகுகள் காய்ந்திருந்ததால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப் போது தீப்பிடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
