திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட சேமிப்பு கிடங்குகளில் விளைப் பொருள்களை சேமித்து வைப்பதில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள் முன்னிலையில் இருப்பதாக மண்டல மேலாளர் சிவஜோதி தெரிவித்தார்.
விவசாயிகளின் விளை பொருள்களை, தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகளில் சேமிப்தற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் திண்டுக்கல் மண்டல மேலாளர் எம்.சிவஜோதி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 250 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டல மேலாளர் சிவஜோதி பேசியதாவது: திண்டுக்கல் மண்டலத்தில் 6 மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில், அதிகப்டசமாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், மிளகு உள்ளிட்ட விளை பொருள்களை 10ஆயிரம் டன்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன் பெற்றுள்ளனர். சேமிப்பு கிடங்குகளில் விளை பொருள்களை வைத்தற்கான ரசீது இருந்தால் வங்கிகளில் கடனுதவி பெற முடியும். தனியார் சேமிப்பு கிடங்குகளில் இந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால், விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் பங்கேற்ற விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக மருந்து தெளிப்பதற்கான ரூ.1200 மதிப்பிலான கைத் தெளிப்பான் கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.