திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியது: பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட 5 கிராமங்களுக்கு, எஸ்.புதுக்கோட்டை வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. ஆனால், 1500 பேர் வசித்து வரும் எங்கள் கிராமம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டபோது, எஸ்.புதுக்கோட்டை கிராமம் இணைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், இணைப்பதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வரும் எங்கள் கிராமத்தை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பிள்ளையார் நத்தம்: இதேபோல், பிள்ளையார்த்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் முறையான குடிநீர் வசதி கேட்டு மனு அளிக்க வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற பின்னர், எங்கள் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், நாங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளோம். எனவே, ஆத்தூர் நீர்த்தேக்கத்திலிருந்து வழங்கப்படும் குடிநீரை, வாரத்திற்கு ஒருமுறையாவது வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

