பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

செந்துறையில் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா, அலங்கார சப்பர பவனியுடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா, அலங்கார சப்பர பவனியுடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2ஆவது நாளில், புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல், சப்பர பவனி, அன்பின் விருந்து வழங்கப்பட்டது. 3ஆம் நாளில் பொதுப் பொங்கல், ஆடம்பரத் திருவிழா திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர் உள்ளிட்ட புனிதர்களின் தேர்பவனி புதன்கிழமை நடைபெற்றது.
செந்துறையில் நேதாஜி நகர், பாத்திமா நகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது உப்பு, மிளகு, பொரி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.  பங்குத்தந்தை ஜோசப்சேவியர் மற்றும் வின்சென்ட்  ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்று, கொடியிறக்கத்துடன் திருவிழா முடிவடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.