செந்துறையில் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா, அலங்கார சப்பர பவனியுடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா, அலங்கார சப்பர பவனியுடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2ஆவது நாளில், புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல், சப்பர பவனி, அன்பின் விருந்து வழங்கப்பட்டது. 3ஆம் நாளில் பொதுப் பொங்கல், ஆடம்பரத் திருவிழா திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர் உள்ளிட்ட புனிதர்களின் தேர்பவனி புதன்கிழமை நடைபெற்றது.
செந்துறையில் நேதாஜி நகர், பாத்திமா நகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது உப்பு, மிளகு, பொரி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். பங்குத்தந்தை ஜோசப்சேவியர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்று, கொடியிறக்கத்துடன் திருவிழா முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






