திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 250 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 250 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களை கண்டறிந்து, இலவச வீட்டு மனைப் பட்டாவுடன், வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவண படத்தின் அறிமுக விடியோ!

தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

